தேனி ராஜவாய்க்காலில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி, பதறவைக்கும் சிசிடிவி காட்சி
தேனி நகரின் மையப்பகுதில் இராஜ வாய்க்கால் கொட்டகுடி ஆற்றில் இருந்து திறந்துவிடப்படும் இந்த வாய்க்காலில் பல ஆண்டுகளாக கழிவுநீர் மட்டுமே சென்று தற்போது சேறும் சகதியுமாக உள்ளது.
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பங்களா மேடு பகுதியில் செல்லும் இந்த வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்து என்பவரது நான்கு வயது மகள் கீர்த்தனா தெருவில் விளையாடும் போது இராஜவாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கினார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த பெண்கள் கூச்சலிட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தக்க நேரத்தில் கால்வாயில் இரங்கி மூழ்கிய சிறுமியை உடனடியாக மீட்டார்.
நொடி பொழுதில் சிறுமி மீட்கப்பட்டதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சிறுமி கால்வாயில் விழுவதும் இளைஞர் மீட்பதும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அந்த சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.