தேனி ராஜாவாய்க்கால் பகுதியில் தவறி விழுந்த மாட்டினை பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.

தேனி ராஜாவாய்க்கால் பகுதியில் தவறி விழுந்த மாட்டினை பல மணி நேரம் போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.
தேனி சுந்தரம் தியேட்டர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரின் மேய்தல் மாடுகளில் ஒன்று நேற்று இரவு முதல் காணவில்லை என்று தேனி பகுதி முழுவதும் தேடி வந்துள்ள நிலையில் இன்று காலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட் பின்புறத்தில் செல்லக்கூடிய ராஜவாய்க்காலில் ஒரு மாடு தவறி விழுந்து உள்ளதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மாட்டினை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வாய்க்காலில் தவறி விழுந்த மாட்டினை மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
CATEGORIES தேனி