தேனி லட்சுமிபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் ராஜன் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கட்டிவந்தார். பணிகள் நிறைவுபெற்ற கும்பாபிஷேகத்திற்கு தயாரானது கோவில்.
அதனைத்தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட்டு ஓதுவர்கள் வரவழைக்கப்பட்டுவேத மந்திரங்களை முழங்கி புணித நீரை கோபுர கலசங்கள் ஊற்றி இன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கலசத்தில் ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீதும் தெளித்தனர்.
பின்னர் சாய்பாபாவை பக்தர்கள் வழிபட்டனர். கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் வருகை தந்த பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது . இந்த கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை காண்பதற்கு ஏறாளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS ஆன்மிகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தேனிதேனி மாவட்டம்முக்கிய செய்திகள்லட்சுமிபுரம் கிராமம்ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்