தேன்பள்ளி கிராமத்தில் புறம்போக்கு இடம் தனியார் நபரால் ஆக்கரமிப்பு: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை! பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தேன்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் மாலதி. இவரது கணவர் ரகு. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்காகவும் படிப்பகம் கட்ட இருந்த இடத்தை ஒரு தனி நபருக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுத்திருந்தார் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ரகு. இதை தட்டிக் கேட்கும் வகையில் இளைஞர்கள் ரகுவை சாலையில் நிறுத்தி நியாயம் கேட்டதாக கூறப்படுகிறது. வெங்கடாபுரம் அருந்ததியர் காலனி மாணவ, மாணவிகளுக்கு படிப்பகம் கட்டக் கூடாதா?. எங்கள் ஊரில் இருந்த பொது இடத்தை ஒரு தனி நபருக்கு தருவாயா? என்று கிராம இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான நான் தான் இங்கு எதையும் முடிவு செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்யும் அதிகாரம் உள்ளவன். என்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற பதிலை சொன்னதோடு தெனாவெட்டாக அந்த இடத்தை அவனுக்கு விற்று விட்டேன்.
உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இதனால் தேன்பள்ளி கிராமத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் அராஜகப் போக்கையும், அவர்களின் கையாலாகாத தனத்தையும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனிடம் முறையிட்டனர். அதற்கு அவரும் இதெல்லாம் கிராமத்தில் நடப்பது சகஜம். யாராவது அவர்களது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தால் இதை கண்டு கொள்ளக் கூடாது என்று உபதேசம் செய்வதாக கூறப்படுகிறது.
இதனால் கிராம பொதுமக்கள் வருவாய்த் துறையினரின் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். ஆதலால் விரைவில் இந்த பகுதியில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட கிராம பொதுமக்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குள்ளாக மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சனையில் தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்