தேமுதிக ஈரோடு பாராளுமன்ற பொறுப்பாளர் நியமனம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக
நியமிக்கபட்ட கழக மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை மற்றும் கலை இலக்கிய அணி துணை செயலாளர் கேப்டன் கணேஷ் ஆகியோரை
மாவட்ட கழக செயலாளர்
ஆனந் அறிமுகம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கழக நிர்வாகிகளுக்கு எதிர்வரும் தேர்தல் மற்றும் கழக பணி குறித்தான
பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொறுப்பாளர்களிடம் பல்வேறு கருத்துகளை பரிமாறி கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் எங்களது முழு பங்களிப்புடன் தேர்தல் பணி ஆற்றுவோம் என்றும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
CATEGORIES ஈரோடு
TAGS ஈரோடு மாவட்டம்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்பிரேமலதா விஜயகாந்த்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்