BREAKING NEWS

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ராஜபாளையத்தில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த ராஜ்குமார் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முத்து வெள்ளையப்பன் கோரிக்கை முழக்கமிட்டார். சாலைப்பணியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் கோபால் வாழ்த்துரை வழங்கினார்.

 

மெழுகுவர்த்தி ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், திமுக அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்,

 

 

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணிக்கொடை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர். மகேஸ்வரி நன்றி கூறினார்.

ம.வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.

CATEGORIES
TAGS