BREAKING NEWS

தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதை அடுத்து தமிழக கேரள எல்லையான தேனி மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை

தமிழகம் கேரளா போன்ற பகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் மாநிலங்கள் முழுவதும் பறக்கும் படையினர், காவல்துறையினர், உள்ளிட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக தீவிரமாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி தேனி மாவட்டம் தமிழக தேர்தல் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்வதற்காக மூன்று வழித்தடங்கள் உள்ளன குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு ஆகிய மூன்று சோதனை சாவடிகள் வழியாக நாள்தோறும் ஏராளமானோர் தமிழக கேரள பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும் பணம், பரிசு பொருட்கள், மது போன்றவை எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இன்று தமிழக கேரளா எல்லையான குமுளி சோதனை சாவடியில் உள்ள தமிழக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாகனங்களையும், தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சென்று வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்தனர்.

இந்த சோதனை தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளவரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS