தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா

தேவிபட்டணம் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி 18வது ஆண்டு விழா நடைபெற்றது கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் மாடக்கண்ணு பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் ஞா.தேவபிரியம் உதவி கருவுல அலுவலர்புதுமாடசாமி மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் முன்னிலை வகித்தனர்
தலைமை ஆசிரியர் பூபதிராஜா ஆண்டறிக்கை வாசித்தார்
சிவகிரி பங்கு தந்தை பள்ளி நிர்வாகி. A.அருள் அலெக்சாண்டர் அருட்பணி. அருட்சகோதரி மேரி போஸ் இந்து துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் கார்த்திக் சிறப்பு விருந்தினர்கள் ஆர்.சி.தொடக்கப்பள்ளி, தலைமையாசிரியர் அந்தோணி ஆசிரியர் இக்னேசி சாமி சாமி நினைவாக பணி நிறைவு பெற்ற ஆசிரியை சீனியம்மாள் ஆசிரியை
செல்லையாக்கவுண்டர் – ராமலட்சுமி நினைவாக பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண்மை துறை ஆசிரியர் C.கந்தன் மற்றும் பெரியாண்டவர்
சக்திவேல் ஆசாரி ஆகியோர் கல்விப் பரிசுகள் வழங்கினார்கள்
மணிகண்டன், தங்கராஜ், தங்கமலை, கதிரவன், பாலமுருகன், ராமசாமி, தங்கராஜ், ராமசாமி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்
தமிழ்நாடு மின்சார வாரியம் வருவாய் மேற் பார்வையாளர் அந்தோணி சாமி சென்ற ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
காளிமுத்து, இராஜன், பெத்தராஜ் சோலையப்பன் ஆகியோர்கள் பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள் வழங்கினார்கள்
பள்ளியின் ஆசிரியர் திரவியராஜ் நன்றி கூறினார் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் படம் தேவிபட்டணம் ஆர்சி உயர்நிலைப் பள்ளியின் பதினெட்டாவது ஆண்டு விழா நடைபெற்றது