தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர மாவட்டச் செயலாளர் டாக்டர் ராமநாதன் பல்வேறு இடங்களில் கொடி ஏற்றினார்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை மாநகர முழுவதும் கழகக் கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன கேப்டன் விஜயகாந்த் நீடூழி வாழ கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டன தஞ்சை அன்பு இல்லத்தில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட மனநலம் குன்றிய மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தஞ்சை மாநகர மாவட்ட கழகச் செயலாளர் டாக்டர் ப.இராமநாதன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிகளை கிழக்குபகுதி செயலாளர்
D செந்தில் காந்த் ஏற்பாடு செய்து இருந்தனர் தஞ்சை மாநகர பேரூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர். அதேபோல் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கட்சி கொடி கம்பத்தில் மாவட்ட மாநகர செயலாளர் டாக்டர் ப.ராமநாதன் கொடி ஏற்றினார்.