தைப்பூசத்தை முன்னிட்டு மயிலாடுதுறையிலிருந்து பழனி செல்ல கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க உள்ளதாக அறிவிப்பு .

மயிலாடுதுறையில் இரவு 7.35 மணிக்கு மயிலாடுதுறை தஞ்சாவூர் /திருச்சி ரயில் 4.2.2023 மற்றும் 5.2.23 ஆகிய இரண்டு நாட்களும் வண்டி எண் 06127 திருச்சி பழனி சிறப்பு ரயிலாக தொடர்ந்து இயங்கி பழனிக்கு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்றடையும் என்றும்,
மறு மார்க்கத்தில் 5.2.23 மற்றும் 6.2.23 இரு தினங்களும் வண்டி எண் 06128 பழனி திருச்சி சிறப்பு ரயில் பழனியில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 7:00 மணிக்கு வந்து மீண்டும் அதே பெட்டிகளுடன் வண்டியின் 06646 ஆக வழக்கம்போல் திருச்சியிலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 10:30 மணிக்கு சென்றடையும் என்றும்,..
அதேபோல் 5.2.23 மற்றும் 6.2.23 ஆகிய இரு தினங்களிலும் மயிலாடுதுறையில் காலை 7:15 புறப்படும் வண்டி எண் 06415 மயிலாடுதுறை – தஞ்சாவூர் ரயில், தஞ்சாவூரில் இருந்து வண்டி எண் 06129 தஞ்சாவூர் – பழநி சிறப்பு ரயிலாக தொடர்ந்து இயங்கி பழநிக்கு பகல் 1.15 மணிக்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் அதே தினங்களில் பழனியில் வண்டி எண் 06130 பழனி தஞ்சாவூர் சிறப்பு ரயில் பழனியில் பகல் 2 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு மாலை 6:15 மணிக்கு வந்து தொடர்ந்து வண்டி எண் 06416 தஞ்சாவூர் மயிலாடுதுறை ரயிலாக இயங்கி மயிலாடுதுறைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும் என்றும்,
இந்த சிறப்பு ரயில்கள் மூலம் மயிலாடுதுறை குத்தாலம் ஆடுதுறை கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பழனிக்குச் செல்ல முதல் முறையாக நேரடி ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீண்ட கால கோரிக்கையை ஏற்று பழனிக்கு தைப்பூச பண்டிகையை ஒட்டி மயிலாடுதுறையிலிருந்து நேரடி சிறப்பு ரயில் இயக்க திருச்சி கோட்ட ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.