BREAKING NEWS

தொடர் மழையால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு.

தொடர் மழையால் நேரடி விதைப்பு செய்யப்பட்ட விளைநிலங்கள் பாதிப்பு.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பொன்னாப்பூர் பகுதியில் 100 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு பணிகள் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய பொன்னேரி வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாவதால், வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் விதைப்பு செய்து நான்கு நாட்கள் ஆன விளைநிலங்கள் முழுதும், தண்ணீர் நிற்பதால் விதைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ந்து தண்ணீர் நிற்பதால் நேரடி விதைப்பு அனைத்தும் அழுகிவிடுவதால் முளைக்கும் தன்மை இல்லாமல் போய்விடும் என கூறுகின்றனர். இதுவரை ஏக்கருக்கு 18,000 வரை செலவு செய்திருப்பதாகவும் இன்று மாலைக்குள் தண்ணீர் வடியாவிட்டால் விதைப்பு பணிகள் முற்றிலும் வீணாகிவிடும் என்கின்றனர். பொன்னேரி வடிகால் வாய்காலில் இருந்து தண்ணீர் தொடர்ந்து விலைநிலங்களுக்குள் புகுந்து வருவதால், தண்ணீர் வடிய வாய்ப்பில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்காலை முறையாக தூர்வார வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )