நகை கடன் உண்மையான பயனாளிகள் கிடைக்கவில்லை என கூட்டுறவு வங்கியில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் எச் எச் 500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசு அறிவித்த நகை கடன் தள்ளுபடி உண்மையான பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட…
சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் மேல் முறையீடு செய்தும் எவ்வித பதிலும் இல்லாமல் மீண்டும் நகைக்கடகனுக்கு வட்டி கட்ட வங்கி நோட்டிஸ் அனுப்பியதை அடுத்து ஆவேசமடைந்த பாதிக்கப்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டு தங்களுக்கு வீடு மற்றும் நிலம் என ஏதுமின்றி வசித்து வரும் நபர்களாக இருந்து வரும் நிலையில்,
கூட்டுறவு வங்கியில் வைத்திருந்த குறைந்த எடை கொண்ட நகைகள் 14 – 16- 17 – 18 கிராம் நகை மட்டுமே வைத்திருந்த நிலையில் 100 கிராமிற்கு மேலாக நகை வைத்தது போல் பதிவாகியுள்ளதால்,
நகை கடன் தள்ளுபடி செய்ய முடியவில்லை எனக் கூறியதால் முறையான ஆவணங்களை பதிவு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மனம் வேதனை அடைந்த கூலித் தொழிலாளிகள் செயலாளர் மற்றும் தலைவரை கண்டித்து கையில் மண்ணெண்ணெய் உடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த சாத்தனூர் அணை காவல்துறையினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்படவர்களிடம் சமரச பேசியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் முறையான தகவல் அளிக்கப்படும் என கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.