BREAKING NEWS

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக ஏ எல் விஜயன்  அறிவிப்பு.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார் இந்நிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளராக ஏ எல் விஜயன்  அறிவிப்பு.

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்பொழுது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது இந்நிலையில் அதிமுகவின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அறிவித்தார் இதன் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஆன ஏ.எல்.விஜயன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாகதெரிவித்துள்ளனர். அதிமுக வேட்பாளரான ஏ எல் விஜயன் 15. 6 .1979 ஆம் ஆண்டு சோளிங்கரில் பூர்விகமாகக் கொண்டு பிறந்தவர்.இவர் கவிதா டெக்ஸ்டைல் துணிக்கடையை நடத்தி வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைத்துக் கொண்டு வேலூர் ஒருங்கிணைந்த பாசறை செயலாளராக செயல்பட்டு வந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சோளிங்கர் பேரூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று பேரூராட்சி தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்றி இருக்கிறார். இதனை தொடர்ந்து சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளராக தற்போது இவர் அதிமுகவில் கட்சிப் பதிவில் வகித்து வருகிறார். இவருக்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது வேட்பாளராக அறிவித்து வாய்ப்பு வழங்கி உள்ளார். மேலும் இவருக்கு கவிதா என்ற மனைவியும், மகள் அக்ஷிதா, மகன் ஹரிஷ் ராகவேந்திரன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இவரது தொழில் துணி கடை நடத்துவது மட்டும் ஆகும் .மேலும் இவரது அண்ணன் தற்போது நகர மன்ற உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this…

CATEGORIES
TAGS