BREAKING NEWS

நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள், நம் வாழ்வியல் முறைகளை எடுத்துக்கொண்டாலே நாம் நோயில் இருந்து விடுபடலாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.

நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள், நம் வாழ்வியல் முறைகளை எடுத்துக்கொண்டாலே நாம் நோயில் இருந்து விடுபடலாம் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு.

செய்தியாளர் செங்கைஷங்கர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ‘எதிர்கால தலைமுறைக்கான தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆயுர்வேதம்’ என்கிற தலைப்பில் நிகழ்ச்சி எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

 

ஆயுர்வேதத்தை மருத்துவ முறைகளின் முக்கிய நீரோட்டங்களில் ஒன்றாக ஊக்குவிப்
பதற்காகவும் அதன் வலிமை மற்றும் தனித்துவமான சிகிச்சையை மையப்படுத்து
வதற்காகவும் அகில இந்திய ஆயுர்வேத காங்கிரஸின் தமிழ்நாடு பிரிவுடன் இணைந்து இந்திய மருத்துவ முறையின் இன்டர்டிசிப்ளினரி இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் சிஸ்டம் ஆஃப் மெடிசின் மற்றும் SRM IST ஆகியவற்றால் 3 நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆயர்வேதா, சித்தா, யுனானி, அலோபதி போல அத்தனை வகையான மருத்துவரும், மருத்துவமும் சேர்ந்து ஒருங்கிணைந்த அமைப்பு என அழைப்போம்.

 

 

அலோபதி மருத்துவத்தை முதன்மை மருத்துவமாகவும், இதில் நமது இந்திய மருத்துவத்தை மாற்று மருத்துவம் என சொல்லுவார்கள். இதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. நாம் பிறக்கும் போதே பல நோய்களோடு பிறக்கிறோம், நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள் மற்றும் நம் வாழ்வியல் முறைகளை எடுத்துக் கொண்டாலே போதும் நாம் நோயில் இருந்து விடுபடலாம்.

 

அதனால் தான் இலவம்பஞ்சு மெத்தையில் படுக்க வேண்டும் என சொல்வார்கள் ஆனால் நாம் அதை பொருட்படுத்தாமல் ரப்பர் மெத்தைகளை தேடி செல்கிறோம். மண் பானையில் சமைக்க வேண்டும். இதைத்தான் இதை ஒரு வகையில் ஆயுர்வேதம் நமக்கு சொல்கிறது. ஆனால் அதையெல்லாம் நாம் மறந்து விடுகிறோம்.

 

 

இயற்கையான வாழ்வியலோடு இணைந்தது தான் நம் ஆயுர்வேதம் மற்றும் நம் இந்திய மருத்துவம் என பேசினார். நம்முடைய மனநிலையை பொறுத்தவரை வெளிநாட்டிலிருந்து ஏதாவது வந்தால் யாராவது சொன்னால் தான் அது ஏற்றுக் கொள்கிறோம் அதை பின்பற்றுகிறோம். நம்மை சுற்றி இருப்பது எதுவும் நமக்கு சரியாகாது என்கிற மனநிலையில்தான் நாம் இருக்கிறோம் என்றார்.

 

 

சிலருக்கு பாரம்பரிய இந்திய நடைமுறைகள் மீது அவமதிப்பு இருப்பதாக அவர் கூறினார், மேற்கில் லீச் சிகிச்சை பிரபலமடைந்து வரும் நிலையில், சில கூறுகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் சில ஆயிரம் ஆண்டுகளாக இது பயன்படுத்தப்பட்டது. சில குடும்ப மருத்துவர்கள் சில நோய்களை குணப்படுத்த உண்மையிலேயே அற்புதமான மருந்துகளைக் கண்டு
பிடித்துள்ளனர், ஆனால் அவர்கள் இந்த செயல்முறையை ரகசியமாக வைத்திருந்தனர் என்றும் கூறினார்.

 

 

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற தேசிய அளவிலான ஆயுர்வேதா மாநாட்டில் துணை வேந்தர் முத்தமிழ்செல்வன், பதிவாளர் பொன்னுசாமி, இளஞ்செழியன் மற்றும்
பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்திய மருத்துவமுறை மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் மாணவர்கள் என 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 

CATEGORIES
TAGS