BREAKING NEWS

நரசிங்கபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

நரசிங்கபுரம் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு!

மனசாட்சி அற்ற அதிகாரம் படைத்தவர்களிடம் வேண்டுவதாலோ கெஞ்சுவதாலோ யாசிப்பதாலோ இழந்த உரிமைகள் பெற முடியாது மக்களை அணிதிரட்டி போராட்டங்கள் மூலமாக அவற்றை திரும்ப மீட்க முடியும் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

 

நரசிங்கபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நரசிங்கபுரம் பஞ்சாயத்து என்பது பாரம்பரியமிக்க ஒரு பஞ்சாயத்தாக கடந்த காலங்களில் திகழ்ந்தது கிட்டத்தட்ட 12 கிராமங்களுக்கு மேல் உள்ள பஞ்சாயத்து இது 13,000 வாக்காளர்களைக் கொண்டது.

 

ஆனால் குடிநீர் தெரு விளக்கு கால்வாய் சுத்தம் செய்வது போன்ற சுகாதாரப் பணிகளில் கூட கவனம் செலுத்த மறுக்கிற ஒரு பஞ்சாயத்து தலைவரை நாம் பெற்று இருக்கிறோம் இன்றைய சூழலில் எங்கள் கிராமம் மேட்டுத்தங்கால் பகுதியில் 300 வீடுகள் இருக்கும் பட்டியல் வகுப்பைச் சார்ந்த இம்மக்களுக்கு எந்தவிதமான பயனும் இதுவரை கிடைத்ததில்லை எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய அளவில் மின்சார ஒயர்களை அறுப்பதும் உணவு தானியங்களை சேதப்படுத்துவதும் கடந்த மூன்று வருடங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

 

மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு அவல நிலை இதை பஞ்சாயத்து தலைவரிடம் சொன்னால் இதுவரை எந்த பயனும் இல்லை எழுத்து மூலமாகவும் தெரிவித்திருக்கிறோம் சமீபத்தில் கலெக்டரை சந்தித்து 50க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருக்கிறோம் அரசாங்கத்திற்கு சொந்தமான 11 ஏக்கர் நிலங்களை தனியார் இருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.

 

அதை பிரித்து ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட பட்டாவுடன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம் இட ஒதுக்கீடு அடிப்படையில் பஞ்சாயத்து தலைவரான L.மனோகரன், அவர்கள் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், புகைப்படத்தை தன் அலுவலகத்தில் வைக்க மறுக்கிறார் குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் ஏறி மண்ணை எடுத்து கடத்தி விற்கப்படுகிறது.

 

அதேபோன்று ஆற்று மணலும் கடத்தப்பட்டு விற்கப்படுகிறது பொது மக்களிடம் குறை தீர்வு மனுவாகப் பெறப்படும் எந்த ஒரு மனுவிற்கும் இதுவரை தீர்வு காணப்படவில்லை இவர் பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகு தொடர்ந்து பனை மரங்கள் வெட்டப்படுகிறது மரங்களை வெட்டக்கூடாது என அரசாணை உள்ளது இப்படி மக்களைச் சார்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி வெகுவிரைவில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தை பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.

மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS