BREAKING NEWS

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் சிறுநெசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

 

 

நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா குமரேசன் தலைமை தாங்கினார்.ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் தீர்மானங்களை படித்துக் காண்பித்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினார்.

 

 

சிறு நெசலூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா வேல்முருகன் தலைமை தாங்கினார், கிராம பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு கிராமத்தின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானமாக நிறைவேற்றினர்.

 

 

அப்போது ஊராட்சி செயலாளர் செல்லவேல் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான ஒரு ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS