நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி மகா லெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிப்பு. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தஞ்சையில் நவராத்திரி விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி மகா லெட்சுமி அலங்காரத்தில் அருள்பாலிப்பு. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கலை காட்சிகளை கண்டு சென்றார்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் செய்யப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
விழாவின் ஆறாம் நாளான இன்று பெரியநாயகி அம்மனுக்கு மகா லெட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்