BREAKING NEWS

நவல்பட்டு போலீஸ்காரனில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டுசம்சரா என்னும் வருடாந்திர நிறைவு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

நவல்பட்டு போலீஸ்காரனில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தில் 34 ஆம் ஆண்டுசம்சரா என்னும் வருடாந்திர நிறைவு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ் காலணியில் ஞான விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு சம்சரா என்னும் வருடாந்திர நிறைவு சிறப்பு ஹோமம் இன்று காலை தொடங்கியது.

அப்போது பரிவார தேவதை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . இதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க யாக குண்டத்தில் மூலிகை வேர்கள், நவ தானியங்கள், பழங்கள் ஆகியவற்றை இட்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. இதையடுத்து மகா பூர்ணாஹூதி மற்றும்,

மகா தீபாராதனை நடைபெற்றது.இந்த சிறப்பு யாகத்தினை கணேச குருக்கள் மற்றும் ஆலய அர்ச்சகர் வைத்தியநாதன் ஆகியோர் செய்தனர். சிறப்பு பூஜை முன்னிட்டு ஆலயத்தில் மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்திலும் உற்சவருக்கு ஊஞ்சல் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதில் அப்போதையைச் சேர்ந்த  பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )