BREAKING NEWS

தமிழ்நாடு காவல்துறை குடும்ப மாணவ செல்வங்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை குடும்ப மாணவ செல்வங்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள காவலர்களின் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அடுத்து என்ன படிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய இந்த நிகழ்ச்சியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு காவலர்களின் மாணவ மாணவிகளை
ஊக்கப்படுத்தி பேசினார்.

அதில் மாணவ மாணவிகளாகிய நீங்கள் தற்போது எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

உங்களில் சிலர் தங்களுடைய இலக்கு எது என்பதை நிர்ணயித்திருப்பார்கள். ஆனால் இன்னும் பலர் அப்படிப்பட்ட இலக்குகள் எது என்பதை நிர்ணயிக்காமல் இருந்தாலும் அது தவறில்லை இனி வரக்கூடிய நாட்களிலாவது உங்களுடைய இலக்கு எது என்பதை நிர்ணயுங்கள்.

உங்களுடைய இலக்கு எது என்பதை நிர்ணயிக்க இந்த நிகழ்ச்சி நிச்சயம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
தமிழக முதல்வர் அறிவித்த ஒரு திட்டமான நான் முதல்வன் என்ற திட்டத்தின் நோக்கம் எந்த பணியாக இருந்தாலும் என்னைவிட சிறப்பாக யாரும் செய்யவில்லை என்ற அந்த நிலையை அடைவதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இந்த திட்டம் அமைந்துள்ளது. எனவே மாணவர்களாகிய நீங்கள் BIW (Best in the world) வாக மாற முயற்சி செய்யுங்கள்.

ஒவ்வொரு மாணவரும் மாணவியும் தங்களுடைய தந்தை தாய் என்ன செய்கிறார்கள் தந்தையினுடைய பணி என்ன என்று முழுதாக அறிந்து கொள்ளுங்கள் காவலர்கள் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் மகிழ்ச்சியாக பணியாற்ற வேண்டுமென்றால் முதலில் அவர்களுடைய குழந்தைகள் தங்களுடைய இலக்கை நிர்ணயித்து அவர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஒவ்வொரு காவலர்களுக்கும் ஏற்பட வேண்டும்.

எனவே மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் உங்களுடைய இலக்கை நிர்ணயித்து அவற்றை நோக்கி ஓட ஆரம்பியுங்கள் அது உங்களை வழிநடத்தும் என்று கூறினார். மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு பிடித்தமான படிப்பு தேர்வு செய்த படியுங்கள் அதுதான் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும், இன்று உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மிகப்பெரிய தொழில் துறையின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் எல்லாரும் குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது உழைக்கிறார்கள்.

நாளுக்கு நாள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க கூடிய பலர் உழைப்பதால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து அந்த நிலையில் நிற்க முடிகிறது. எனவே நீங்களும் தொடர்ந்து உழையுங்கள் நீங்கள் செய்யும் தொழில் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் நீங்கள் பயிலும் கல்வி உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் பணம் என்பது மட்டுமே இங்கு ஒருத்தருக்கு மகிழ்ச்சியை தந்துவிட முடியாது உங்களுடைய கல்வியும் தொழிலும் தான் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி தான் உங்களுக்கான சம்பளம் எனவே முயற்சியை விடாமல் தொடர்ந்து உழைக்க முயற்சி செய்யுங்கள் என்று பேசினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )