BREAKING NEWS

நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி சார்பில் தத்தெடுத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி சார்பில் தத்தெடுத்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப் பள்ளியை தத்தெடுத்துள்ளது. 75 வது சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவினை முன்னிட்டு நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்த தேனி மாவட்டம் குன்னூர் அரசு ஆதி திராவிட நல மேல்நிலைப் பள்ளி, மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் அனைத்து நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்கள் தலைவர் T.ராஜமோகன், B.Sc.,தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். மேலும் .P.P.கணேஷ், B.Sc., உபதலைவர், M.M. ஆனந்தவேல், MBA, பொதுச்செயலாளர் மற்றும் திரு.M.பழனியப்பன், பொருளாளர் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மற்றும் அனைத்து நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்கள் அவர்கள் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் Y. நிக்சன் M.Sc.,M.Ed., M.Phil.,M.Sc(Psy), தலைமையாசிரியர், அரசு (ஆதிந) மேல்நிலைப் பள்ளி, குன்னூர், தேனி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்திகழ்வில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பெரியோர்கள் தத்தெடுத்த பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 225 பேருக்கு, ரூபாய் 20000 மதிப்புள்ள கல்வி உபகரணங்களை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் திரு.A.குணசேகரன்,B.Com., செயலாளர், மற்றும் திரு.A.மணிமாறன், இணைச்செயலாளர், Dr.J. பியூலா ராஜினி Ph.D.. முதல்வர், நாடார் சரசுவதி கல்வியியல் கல்லூரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். கல்லூரி பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். திரு.B.பாலசுப்பிரமணியன் M.Sc.M.Ed., உதவி தலைமையாசிரியர், அரசு (ஆதிந) மேல்நிலைப் பள்ளி, குன்னூர், தேனி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )