நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த மூன்று தினங்களில் மின்னல் முருகேஷ் என்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று மேலும் சிலர் மனுதாக்கல் செய்துள்ளனர் .
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் சுயேட்சையாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்
இதனைத் தொடர்ந்து கீர்த்தனா என்பவரும், விஜய் சூர்யா என்பவரும் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இவர்கள் மூவரையும் சேர்த்து இதுவரை இதுவரை ஈரோடு நாடாளுமன்ற தொகுதிகள் போட்டியிட நான்கு பேர் சுயேட்சைகளாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
CATEGORIES ஈரோடு
TAGS அரசியல்ஈரோடு மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நாடாளுமன்றத் தேர்தல்மாவட்ட செய்திகள்முக்கிய செய்திகள்