நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.
நாட்டிலேயே பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக. இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் 500 ரூபாய்க்கு மீண்டும் சிலிண்டர்.நாட்டிலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜக தான். தேர்தல் பத்திரங்களின் மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், உலகம் சுற்றும் பிரதமர் மணிப்பூர் பற்றி எரிந்த போது அங்கு செல்லவில்லை என கழக மாநில துணை பொது செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி பேச்சு
கரூர் நாடாளுமன்ற தொகுதி.கரூர் கிருஷ்ணராயபுரம் கா பரமத்தி பகுதியில்
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கழக துணை செயலாளரும் தூத்துக்குடி எம்பி ஆன கனிமொழி தேர்தல் பிரச்சாரம் .
அப்போது பேசிய அவர் இந்தத் தேர்தல் ஆனது அரசியல் கட்சிகளின் வெற்றிக்கான தேர்தல் என்றும் நாட்டை மீட்டெடுக்கக்கூடிய தேர்தல் என்றும், ஒன்றிய பாஜக அரசு நாட்டினை சிதைத்து வருவதாகவும், மணிப்பூரில் ஆட்சி செய்யும் பாஜக இரு பிரிவினருடைய கலவரத்தை தூண்டிவிட்டு அந்த மாநிலத்தையே சிதைத்து விட்டதாகும் அங்குள்ள மக்கள் உணவுக்கு வழியின்றி அச்சத்துடனே வாழும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகவும், உலகம் முழுவதும் சுற்றும் பிரதமர் மணிப்பூர் பற்றி எரிந்த போது அங்கு செல்லவில்லையாவும், தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது பார்வையிட வராத பால் இருந்த பிரதமர் தற்போது தேர்தல் காக தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார் என்றும்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை தற்போது ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருவதாகவும், பெட்ரோல் விலையினை 50 ரூபாய்க்கு கொண்டு வருவேன் என்று கூறியவர் தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் விட்டு வருவதாக, அனைவருக்கும் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்படும் என்ற பொய்யான வாக்குறுதிகளையே அளித்துள்ளார் என்றும், தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் விலையை ஐநூறு ரூபாய்க்கு தருவதாகவும், தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
பெண்களை சக்தியை பெரிதாக பேசும் பாஜக பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 44 பேரை வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கூட தர முடியவில்லை எனவும், டெல்லியில் நோக்கி போராட வந்த விவசாயிகளை தடுத்து கண்ணீர் புகை கொண்டு வீச்சி, தடியடி நடத்தியது இந்த பாஜக அரசு என்றும்,
100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு உரிய சம்பளத்தினை தராமல் இழுத்தடிப்பதாகவும் அதற்குரிய நிதி ஒதுக்கீட்டு பாரபட்சம் காட்டும் பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 68 ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும்,
உலகிலேயே ஊழல் மிக்க கட்சி என்றால் அது பாஜக தான் என்றும், தேர்தல் பத்திரத்தில் அவர்கள் மேற்கொண்ட ஊழலை நாடே அறியும் என்றும்,
மத்திய குற்ற புலனாய்வுத் துறை அமைப்புகளை கொண்டு பலரையும் மிரட்டி அதன் மூலம் தேர்தல் பத்திர நன்கொடையினை பெற்றுள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் அவர்களை சஸ்பெண்ட்செய்து வருவதாகவும்,
அவர்களின் அடாவடி போக்கால் கரூர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டெல்லி ஹரியானா முதல்வர்கள், ஒரு துணை முதலமைச்சர் என அவர்களை சிறையில் வைத்து ஜாமீன் கூட வெளிவர முடியாதபடி செய்து வருவதாகவும்,
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்திற்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் பல நல்ல திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் செயல்படுத்தி உள்ளதாகவும்,
2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய பிரதமர் அவர்களை கடைசியில் பக்கோடா சொல்லுங்கள் என்றும் அதுவும் வேலைதான் என்று கூறியதாகவும் குற்றம் சாட்டினார்
மேலும் நாடாளுமன்றத்தில் தனது தொகுதி குறித்து பேசிய கரூர் எம்பி ஜோதிமணி கல்லில் நாரை உரிப்பது போல் தனது தொகுதிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் 15 மேம்பாலங்களை 372 கோடி மதிப்பில் கட்டிக் கொடுத்துள்ளார் எனவும் கை சின்னத்தில் வாக்களித்து செய்ய வேண்டும் எனவும் கூறினார்