“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி சின்னசேலத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: சின்னசேலத்தில் உள்ள புனித சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பாக “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” திட்டத்தின் மாவட்ட அளவிலான பயிற்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணியன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் திரு பழனியாப்பிள்ளை அவர்கள் தலைமை ஏற்று பயிற்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு கோபி அவர்கள் முன்னிலை வகித்தார். கருத்தாளராக ஆசிரியர் பயிற்றுனர் திரு சிவக்குமார் அவர்கள் மாணவர்களுக்கு சிறந்த கருத்துக்களை வழங்கினார்.
சிறப்புரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் R. ராஜா S. ராஜா மேற்பார்வையாளர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் வரதராஜன் சக்திவேல் ஆனந்தராசு மாரியப்பன் ரவிக்குமார் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மாணவர்களுக்கு உயர் கல்வி பயில வழிகாட்டுவது குறித்து சிறப்பான கருத்துக்களை வழங்கினார்கள்.
பயிற்சியில் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி குறித்து வழிகாட்டும் ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.