நாற்பது தொகுதியிலும் முதன்மை தொகுதியாக வெற்றிபெற செய்ய வேண்டும் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு

மயிலாடுதுறை பாராளுமன்ற மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஓ.எஸ்.மணியன், திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும். முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் பாபுவை அறிமுகம் செய்து வைத்து பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேசும் போது தமிழகத்தில் 40 தொகுதியிலும் முதன்மை தொகுதியாக மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.
ஓ.எஸ் மணியன் பேசும்போது திமுக கூட்டணியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். பேசினார். கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், இளமதி சுப்ரமணியன், ராம்குமார்.பவுன்ராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரதி மோகன், மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சண்முகபிரபு, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பாபநாசம் செய்தியாளர்
எஸ்.மனோகரன்