BREAKING NEWS

நாளை கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் முதல்வர் தொடங்கி வைப்பு!!

நாளை கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம் முதல்வர் தொடங்கி வைப்பு!!

கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம்

தமிழகத்தில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. தமிழகத்தில் விவசாயம், நீர்வளம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பதற்காக கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் அறிவித்தபடி நாளை சென்னை தலைமை செயலகத்தில், கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதன்படி வேளாண் துறை சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.227 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார்.

வேளாண் துறை நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல: விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வேதனை  | வேளாண் துறை நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல: விவசாயிகள் சங்க ...

 

வழங்கப்பட உள்ள நலத்திட்டங்களில் தென்னங்கன்று, காய்கறி, பழச்செடிகள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும் தரிசாக மாறி விவசாயத்திற்கு தகுதியற்று இருக்கும் தரிசு நிலங்களை சாகுபடி செய்யும் வகையில் மாற்றுதல், நீர்வள ஆதாரங்களை அதிகரித்தல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைப் பொருட்களின் மதிப்பினை அதிகரித்து அவற்றை சந்தைப்படுத்துவது, மேலும் கால்வாய் பாசன நீர் வழித்தடங்களை தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 2,500 கிராமங்களிலும் வேளாண் மற்றும் அதனை சார்ந்த பணிகள் சிறப்பான முறையில் செய்து முடிக்கப்பட உள்ளது குறித்து கிராமமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அறிவித்தபடி இத்திட்டம் தொடங்கப்படுவதால் இதற்கான செயல்முறைகளும் வேகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )