நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டு..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வெளிநாட்டு வங்கி வேலை பார்த்தவர் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி தெரியாமல் பொருளாதாரத்தை கையாள தெரியாமல் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தூர் மெயின் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான புதிய கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடயை மக்கள் பயன்பாட்டுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்ட திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து:..
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள நீர் வரத்து ஓடையை அமைக்கப்பட்டு வரும் தடுப்புச் சுவரை குருங்கிய தடுப்புச் சுவராக கட்டப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளரிடம் கூறுகையில் :
கோவில்பட்டியில் 82 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பெயரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது தடுப்புச் சுவர் அமைப்பதற்காக 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பின்னர் தேர்தல் நடைமுறை காரணத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது ஆனால் தற்போது திமுக ஆட்சி அதை நடைமுறைப்படுத்தவில்லை உச்ச நீதிமன்ற நடைமுறைப்படி தான் ஆக்கிரமிப்புகள் ஆற்றப்பட்டது.
இந்த அரசு செய்யவில்லை அதையும் மீறி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தற்போது ஆக்கிரமித்தால் அதுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள் இது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாகும் இதை புரிந்து கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் இல்லையென்றால் நீதிம நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.
நிதியமைச்சர் மெத்த படித்தவர் அவருக்கு அமெரிக்காவின்
பொருளாதாரம் பற்றி தெரியுமே தவிர தமிழகத்தின் பொருளாதாரம் தெரியாது ஏனென்றால் அவர் நிதி அமைச்சராக ஆன பின்பு ஆக்கப்பூர்வமாக இதுவரை நிதிச்சுமையை கையாளுவது என்ன மாறுதல் கொண்டு வந்திருக்கிறார் என்ன செய்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் அவர் பேசினால் அவருக்கு மட்டும் தான் புரியும் மற்றவர்களுக்கு புரியாது மற்றவர்களுக்கு புரியாது போல் பேசுவார் மற்றவர்களெல்லாம் படிக்காதது போல் பேசுவார் தமிழக மக்களின் எதார்த்த நிலை அவருக்கு தெரியாது அவர் படித்ததெல்லாம் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பிடிஆர் ரோடு வாரிசாக இருக்கலாம் அவருடைய பேரனாக இருக்கலாம் அந்த வகையில் திராவிடத்துக்கு பாரம்பரியத்துக்கு சொந்தக்காரராக இருக்கலாம் ஆனால் அவர் வளர்ந்த விதம் படித்தது எல்லாம் மேலை நாடுகளில் மேலைநாட்டு நகரத்தில் வளர்ந்தவர்.
அது போக அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணியாற்றியவர் இதனால தான் அங்கு உள்ள பொருளாதாரத்தை வைத்து செயல்படுகின்றாரே தவிர இங்கு உள்ள ஏழை மக்களுக்கு விவசாயிகளுக்கு தமிழக மக்களுக்கு பயனளிக்கின்ற வகையில் அவருடைய பொருளாதாரத்துவம் இல்லை என்பது எங்களின் குற்றச்சாட்டு இப்படியே தொடர்ந்தால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதில் முதல் ஆளாக பிடிஆர் இருப்பார்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,அவைத்தலைவர் அப்பாசாமி,
ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன்,அன்புராஜ், நகர துணைச் செயலாளர் மாதவராஜ், நகரப் பொருளாளர் ஆரோக்கியராஜ்,நகர மன்ற உறுப்பினர்கள், கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன்,செண்பக மூர்த்தி,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர்,
அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை,முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், மகளிர் அணி ஜெயந்தி, பத்மாவதி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் பழனி குமார், முருகன், அல்லித்துரை, கனிராஜ்,கோபி, ஜெயசிங்,பழனி முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.