நிலக்கோட்டையில் சீமானை கண்டித்து ஆதி தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மினி பஸ் நிலையம் அருகே ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆதித்தமிழர்களான அருந்தியர்களை இழிவு படுத்தியும், தமிழ்நாட்டில் சமூக பதட்டத்தை உருவாக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வினோத், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமானை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் முரளி, மாவட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் பேரவை பொறுப்பாளர் வடிவேல், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ம.ராஜா.