நிலக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கொத்தனார்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா,
தேனி மாவட்டம், கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி சேர்ந்தவர் செந்தில்குமார் 35. இவர் இப்பகுதியில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு மனைவி ராணி, 2 குழந்தைகளும் உள்ளார்கள். இந்நிலையில் கெங்குவார்பட்டி, வத்தலகுண்டு, கல்லுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் கட்டி தருவதாக ஒரு தனியார் தொண்டு நிறுவனம் பொதுமக்களிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சாரம் செய்துள்ளது.
இந்த நிறுவனத்தில் கட்டிடம் கட்டுவதற்காக கொத்தனார் தேவை என்று கூறியுள்ளனர். இதை நம்பிய செந்தில்குமார் அந்தத் தனியார் தொண்டு நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்து வேலைக்கு சேர்ந்து உள்ளார்.
உங்களது பகுதியில் உள்ள நபர்களையும் சேர்த்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். இதற்கு முன்பணமாக சில ஆயிரம் பொதுமக்களிடம் வசூல் செய்ய சொல்லியுள்ளனர். இதை நம்பிய செந்தில் குமார் தனக்கு தெரிந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் வீடு கட்டித் தருகிறார்கள் என்று கூறி பணத்தை வாங்கி தொண்டு நிறுவனத்தில் கட்டியுள்ளார்.
சில நாட்களில் பொது மக்களிடம் வசூல் செய்த தொகையுடன் தொண்டு நிறுவனம் அதன் உரிமையாளர்கள் தலைமறை ஆகிவிட்டனர். இதனால் வீடுகள் கட்டி தராதால் பணம் கொடுத்தவர்கள் செந்தில்குமாரிடம் பலமுறை கேட்டுள்ளனர்கள். இந்த பொதுமக்கள் திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டுயிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று விசாரணைக்காக வந்த செந்தில்குமார் தனது மனைவி ராணி , 2 குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். நிலக்கோட்டை போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்திற்கு முன்பு செந்தில்குமார் மயங்கி விழுந்தார்.
இதை அறிந்த நிலக்கோட்டை போலீசார் மயங்கி விழுந்த செந்தில்குமார் மற்றும் குடும்பத்தார்களை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .
தற்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஷம் அருந்தி இருப்பதாக தெரிவித்தனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் விசாரணைக்கு அழைத்ததற்கு பயந்து தற்கொலைக்கு முயன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
