BREAKING NEWS

நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம  பகுதியில், 2700 பாட்டில்கள் பறிமுதல். 200 பாட்டில்களில் ஸ்டிக்கர்   ஒட்டபடாததால்,  போலி மதுவா? என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை.

நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம  பகுதியில்,  2700 பாட்டில்கள் பறிமுதல். 200 பாட்டில்களில் ஸ்டிக்கர்   ஒட்டபடாததால்,  போலி மதுவா? என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை.

நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை கிராம  பகுதியில், பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகே விற்பனை செய்வதற்காக, திமுக பிரமுகர் சொகுசு பங்களா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 960  மதுபாட்டில்கள் உட்பட 2700 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

 

இதில், 200 பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டபடாததால், அது போலி மதுவா என, எஸ்பி பாஸ்கரன் நேரில் விசாரணை செய்தார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை கிராமம், ஜெ.மெட்டூரைச் சேர்ந்தவர் காசிமாயன் (45) திமுக பிரமுகரான இவர், கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடம், கோயில்கள் அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார்.

 

 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு, இந்த பகுதி மக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், செவ்வாய்கிழமை  மாவட்ட எஸ்பிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஜெ.மெட்டூரில் உள்ள காசிமாயன் வீட்டில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் திடீர் என, அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த பகுதியில், உள்ள காமலாபுரம், சக்கையநாயக்கனூர், அழகாம்பட்டி, ஜெ.மெட்டூர், ஜெ.ஊத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கும் அருகே விற்பனைக்காக, அவரது சொகுசு பங்களா வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 960 மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

 

மேலும், அங்கு மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டு இருந்த ஆட்டோவையும் போலீசார் மதுபாட்டில்களுடன் பறிமுதல் செய்தனர். மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சொகுசு பங்களாவை எஸ்பி.பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். 960 மது பாட்டில்களில், 200 பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டபடாததால்,  அது போலியான மதுவா? என, எஸ்பி.பாஸ்கரன்  தீவிர விசாரணை செய்தார். இதேபோல் ஜெ.மெட்டூர் அருகே அவரது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1738 மது பாட்டில்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

மொத்தம் 2698  மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அவரது வீட்டில் ஆட்டோவில் பாட்டில்களை ஏற்றிக் கொண்டிருந்த, ஆட்டோ டிரைவர்  கதிர்வேல் (25)  காசிமாயன்  மனைவி தீபா (40)  ஆகியோரை போலீசார் விசாரணைக்காக, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும்,இதுகுறித்து விசாரணை செய்துவரும் தனிப்படை போலீசார், தப்பி ஓடிய காசிமாயனை  வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )