நிலக்கோட்டை அருகே பிரதான கால்வாயில் நீரில் அடித்துச் சென்ற பட்டதாரி வாலிபர் பலி

நிலக்கோட்டை,ஆக.16 – கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் ஜீவா வயது 20. பட்டதாரி ஆவார். நேற்று இவரது உறவினர் நிலக்கோட்டை அருகே உள்ள சி.புதூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஈஸ்வரன் என்பவர் இறந்த பின்னர் நடக்கும் தூக்க நிகழ்ச்சியான கருமாதிக்கு வந்துள்ளார். வந்தவர் குளிப்பதற்காக சி. புதூர் அருகே வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக தற்போது திறந்து விட்டுள்ள பெரியார் பிரதான கால்வாயில் நீரில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஜீவாவை நீர் அடித்து இழுத்துச் சென்றது. அப்போது காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறி உள்ளார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயற்சி செய்தும் பலனில்லை. நீரின் வேகத்திற்கு ஒன்றும் செய்ய முடியாமல் மூச்சுத்திணறியும், உடலில் காயங்களுடன் இழுத்துச் சென்றது. அதைத் தொடர்ந்து உறவினர்கள் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப்பிற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று அணைப்பட்டி அருகே செல்லும் பெரியார் பிரதான கால்வாயில் தேடியபோது உடல் அங்கு சிக்கியது. உடலை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர் . தகவல் அறிந்து உறவினர்கள் அணைப்பட்டி ஜீவாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து சின்னத்துரை கொடுத்த புகாரின்படி விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படவிளக்கம். நிலக்கோட்டை அருகே கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு இறந்த ஜீவாவை படத்தில் காணலாம்.