நிலக்கோட்டை அருகே மகனை தந்தையே கொன்ற பரிதாபம் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே என். புதுப்பட்டியைச் சேர்ந்த அந்தோணி வயது 55. இவர் ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகளும், 4 பெண் குழந்தைகளும் ஆக மொத்தம் 10 குழந்தைகள் உண்டு. இதில் 7வது மகன் பெயர் அஜீத் என்ற ராஜ் வயது 22. அஜித்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மது அருந்தினால் வெறி பிடித்தது மாறி வருபவர்கள், போவர்கள் மற்றும் அங்குள்ள தந்தை, தாய் அனைவரிடமும் தகராறு செய்வது அஜித்குமாரின் வழக்கமாக இருந்துள்ளது. இதனால் அவ்வபோது மது அருந்தினால் போதை இறங்கும் வரை அஜித்தை அதுவும் ஜாக்கிரதையாக பெற்றோர்கள் பார்த்து வந்தார்கள் என கிராம பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டில் படுத்திருந்த அந்தோணியை அஜித் அதிக குடிபோதையில் சென்று கத்தியால் வயிறு முதுகு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அஜித்திடம் இருந்த கத்தியை புடுங்கியை அந்தோணி அஜித்தை குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அஜித் வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று கீழே விழுந்து அதிக ரத்தம் வெளியேறி இறந்து போனார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்தோணியை உடனடியாக மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அஜித்தின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் அறிந்த திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். தந்தையை மகனை கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.