நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வெங்கடாத்ரி கோட்டையைச் சேர்ந்த செல்வ பெருமாள் வயது 59. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று 21.09.2022 மதியம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நீண்ட நாளைக்கு முன்பு அத்துமால் அளக்க கொடுத்த மனுவின் மீது பலமுறை அதிகாரிகளை அணுகி கேட்டபோதும் நடவடிக்கை எடுக்காததால் அதை குறித்து விசாரிப்பதற்காக நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் வந்துள்ளார்.
பின்னர் அது குறித்து விசாரித்து விட்டு மீண்டும் நிலக்கோட்டையில் இருந்து வெங்கடாஸ்திரி கோட்டைக்கு நிலக்கோட்டை – வத்தலக்குண்டு சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வத்தலக்குண்டில் இருந்து எதிரே வந்த நிலக்கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரத்தைச் சேர்ந்த தன பாண்டி ( வயது 25) என்பவர் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி செல்வ பெருமாள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட செல்வ பெருமாள் , தனபால் இருவருக்கும் பலத்த காயமடைந்து நிலக்கோட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் உடனடியாக மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்த மருத்துவர்கள் செல்வ பெருமாளின் உடலை பரிசோதித்து பார்த்து பின்னர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர். தன பாண்டிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். இறந்துபோன முன்னாள் ராணுவ வீரர் செல்வ பெருமாளுக்கு 3 பெண் குழந்தைகளும், மனைவியும் உள்ளார்கள் .