BREAKING NEWS

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக கட்ட கோரி முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள்.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக கட்ட கோரி முற்றுகையிட்ட கிராம பொதுமக்கள்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுக்கு வார்பட்டி ஊராட்சியில் உள்ள சீரகம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

 

இக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் படிப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்குள் தற்போது மழை பெய்வதால் தண்ணீர் புகுந்து பள்ளி நடத்த முடியாத நிலையிலும் மேலும் கட்டிடம் பணிந்துடைந்த நிலையில் இருப்பதால் அதனை உடனடியாக அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட கடந்த பல ஆண்டுகளாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட அரசாங்க நிதி ஒதுக்கியது.

 

 

இதனைத் தொடர்ந்து நேற்று காலை (15.11.2022) நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சென்று சீரகம் பட்டியில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை சீரகம்பட்டியைச் சேர்ந்த ஒரு சிலர் தடுத்ததாக கூறப்படுகிறது.

 

இந்த சீரகம்பட்டி கிராம மக்கள் ஒன்று திரட்டு நேற்று மாலை சுமார் 5 மணிக்கு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த மக்களை நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி ) அண்ணாதுரை நேரில் அழைத்துப் பேசி உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொண்டு சொல்லப்பட்டு அங்கன்வாடி மையம் உடனடியாக கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிடும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )