BREAKING NEWS

நிலக்கோட்டை சுட்டிகாலாடிபட்டியில் பால சாந்தி சேனா அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

நிலக்கோட்டை சுட்டிகாலாடிபட்டியில் பால சாந்தி சேனா அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

 

திண்டுக்கல் மாவட்டம்,

காந்திகிராம பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி முனைவர்.ஜி.ராமசந்திரன் அவர்கள் பிறந்த தினத்தில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம் , கோட்டூர் பஞ்சாயத்தில் உள்ள

 

 சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில், காந்திகிராம பல்கலைக்கழக சாந்தி சேனா பிரிவு வளரிளம் பருவத்தினரை நல்வழிபடுத்த “பால சாந்தி சேனா” அமைப்பைத் துவங்கியது. சாந்தி சேனா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்.இராஜமோகன் வரவேற்புரையாற்றினார்.

 

கூட்டுறவியல் துறை பேராசிரியர்.மணிவேல் அவர்கள் பால சாந்தி சேனா அமைப்பின் தேவைகள், செயல்பாடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைத்து தலைமையுரையாற்றினார்.

 

வாழ்நாள் கற்றல்துறை தலைமைப் பேராசிரியர், புல முதன்மையர் மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினருமாகிய பேராசிரியர்.ராஜா அவர்கள் பாடல்களின் வாயிலாக அன்பின் மகத்துவத்தையும், அகிம்சையின் முக்கியத்துவத்தையும் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து துவக்க உரையாற்றினார்.

 

காந்திய சிந்தனை மற்றும் அமைதியியல் துறையின் சாந்தி சேனா முதன்மை ஒருங்கிணைப்பாளர் தலைமை பேராசிரியர்.மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

 

சுட்டி காலாடி பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். திருமதி மகேஷ்வரி அவர்கள் மாணவர்களிடையே வன்முறையில்லாத, நேர்மையான சமூகம் உருவாக சாந்தி சேனா போன்ற அமைப்புகளே பெரிதும் கைகொடுக்கும் என்றார்.

 

இந்நிகழ்வில், சுட்டிகாலாடிபட்டி ஊர் நாட்டாமை திரு வெ.சின்னான் , கிராமத் தலைவர் திரு.ஊ.வெள்ளைச்சாமி மற்றும் காந்திகிராம பல்கலைக்கழக சாந்தி சேனா மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.             

 

குழந்தைகள் சாந்தி சேனா அமைப்பில், 5ம் வகுப்புமுதல் 10 ம் வகுப்புவரை படிக்கும் 28 மாணவர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர்.

 

பேராசிரியர்.சுரேஷ் குமார் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில், அகிம்சை சார்ந்து பேசிய மாணவி தனுஷ்யாவிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )