நிலக்கோட்டை பகுதியில் நெற்பயிருக்கு டிரோன் மருந்து தெளிப்பு விவசாயிகள் வரவேற்பு.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட விளாம்பட்டி பகுதியில் சுமார் 5000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருவது வழக்கம்.
இவ்வாறு நெற்பயிர்கள் செய்யப்பட்டுள்ள அந்த பகுதிகளில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிலுள்ள காந்திகிராம பல்கலைக்கழக இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையமும்,
காந்திகிராம வேளாண்மை அறிவியல் மையம், நிலக்கோட்டை அரசு வேளாண்மை துறையும் இணைந்து விளாம்பட்டி ஒட்டியுள்ள பகுதிகளில் நெற்கதிர் களுக்கு டிரோன் மருந்து தெளிப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நிலக்கோட்டை தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காந்திகிராம வேளாண் அறிவியல் மைய தலைவர் செந்தில்குமார், காந்திகிராம அறிவியல் மைய இயக்குனர் தமிழ்மணி, நிலக்கோட்டை உதவி வேளாண்மை இயக்குனர் உமா துணை இயக்குனர்கள் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
