நீதிமன்ற ஆணையை காற்றில் பறக்க விட்ட கீழக்கரை தாசில்தார்

கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்யவிடாமல் தடுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள்
கடும் இன்னலுக்கு ஆளான களிமண்குண்டு கிராம மக்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதை கொலை முயற்சி வழக்காக பதிவு செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சியினர் ஐந்து பேர் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் சுற்றுவட்டார கிராம மக்களோடு போராட்டத்தில் குதித்த நாம் தமிழர் கட்சியினர்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே களிமங்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் புராதான தொழிலாக மீன் பிடி தொழில் இருந்து வருகிறது .
இந்த நிலையில் களிமண் குண்டு கடற்கரைக்குச் செல்லும் வழியில் 22 பேர் கொண்ட கும்பலால் 100 ஏக்கர் நிலமானது ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்தப் பகுதியில் அப்பகுதி மக்களை மீன் பிடிக்க செல்ல விடாமல் தடுப்பது மீன்பிடி உபகரணங்கள், மீன் பிடி குடிசைகள் உள்ளிட்டவற்றைகளை தீயிட்டு கொளுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவது மட்டுமின்றி மீனவர்கள் பிடிக்கும் மீன்களைக் கூட அவ்வழியாக எடுத்துச் செல்லவும் அனுமதிப்பதில்லை என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு உயர் நீதி மன்றத்தை நாடி ஆக்கிரமிப்பை ஆறு வாரத்தில் அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை பெற்று அந்த வழக்கிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் இது பற்றி அந்த மக்களிடம் நாம் கேட்டபோது என்ன சொல்றாங்க அப்படினா கீழக்கரை தாசில்தாரிடம் நீதிமன்ற ஆணைப்படி ஆக்கிரமிப்பை ஆறு வாரத்தில் அகற்றி தரும்படி நாடினோம் ஆனால் அதற்கு தாசில்தார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆறு மாதகாலமாக கிடப்பில் பொட்டு வருவதாக குற்றம் சாட்சி வருகிறார்கள்.
குறிப்பாக கடந்த ஜூலை 16ஆம் தேதி ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஆக்கிரமிப்பை அகற்றவும் உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க உறுதுணையாக இருந்த நாம் தமிழர் நிர்வாகியான ஜெகதீஷ் என்பவர் மீது மூன்று காவலர்களின் கண் முன்பே ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் ஜெகதீஷ் தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜெகதீசை தாக்கியவர்களின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஜெகதீஸ் உட்பட மேலும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஐந்து பேரின் மீதும் பொய் வழக்கு பதியப்பட்டதை ரத்து செய்யக் கோரியயும் தற்போது நாம் தமிழர் கட்சியின் உடைய மாநில ஒருங்கிணைப்பாளர் கண் இளங்கோவன் தலைமையில் திருப்புல்லாணி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் களிமண் குண்டு கட்டையன் வலசை வேலாயுதபுரம் சல்லித்தோப்பு மாறிவலசை கள்ளுக்காடு ஆஞ்சநேயர் புரம் சீனி வலசை திணை குளம் சவட்டையன்வலசை குப்பச்சி வலசை சிட்டங்காடு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்களது கண்டன கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இதற்கு எங்களுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் சாலை மறியல் போராட்டம் உயிரை மாய்க்கும் போராட்டம் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்ததோடு எச்சரிக்கையும் விடத்துள்ளனர்