BREAKING NEWS

நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சீருடையில் கைது!

நீதிமன்ற வளாகத்தில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சீருடையில் கைது!

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் நீதிமன்ற வளாகத்தில் சீருடையில் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ், சக காவலர்கள் உதவியுடன் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ். இந்த நிலையில் இன்று நீதிமன்ற வளாகத்தில் சீருடையில் வைத்தே டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

 

வாலாஜாபாத் அருகே பேக்கரியில் நடந்த அடிதடி வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ், சக காவலர்கள் உதவியுடன் தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. அதாவது காஞ்சிபுரம் சிறைக்கு காரில் அழைத்து வரப்பட்ட டிஎஸ்பி சங்கர் கணேஷ், திடீரென அந்த காரில் இருந்து இறங்கி போலீஸ் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து வேகமாக புறப்பட்டார்.

 

திடீரென போலீஸ் கார் வேகமாக செல்வதை பார்த்ததும், அந்த காரை விரட்டி சென்றபடி போலீசாரும் ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சரியாக 20 நிமிடம் கழித்து அதே போலீஸ் வாகனத்தில் மீண்டும் டிஎஸ்பி சங்கர் கணேஷ் காஞ்சிபுரம் சிறைச்சாலைக்கு வந்தார். நீதிபதி, டிஎஸ்பி சங்கர் கணேஷை 22 ஆம் தேதி வரையில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்த நிலையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

 

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் இருவேறு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் அடித்துக்கொண்ட நிலையில், இது தொடர்பாக ஒரு தரப்பினர் காவல் நிலையத்தில் முருகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் அளித்தும் இந்த வழக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல, இந்த விவகாரத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில்தான், சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

காவல்துறையாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கண்டித்த நீதிபதி, 15 நாட்கள் கெடு விதித்துள்ள நிலையில், இன்று மாலை 4.30 மணிக்குள் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிமன்றத்தில் டிஎஸ்பி சங்கர் கணேஷ் ஆஜரான நிலையில் அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் நீதிபதியின் காரிலேயே அழைத்து செல்லப்பட்ட டிஎஸ்பி, சப் ஜெயில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டார்.

பரிசோதனைக்கு பிறகு சிறையில் அடைக்கப்படுவார் என சொல்லப்பட்ட நிலையில், சிறை வாயிலில் காவல்துறை வாகனத்தில் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது.

காவலர்கள் டிஎஸ்பி சென்ற வாகனத்திற்கு வழியை ஏற்படுத்திவிட்டது, தப்ப வைத்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.

CATEGORIES
TAGS