BREAKING NEWS

நீலகிரி மாவட்ட மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் வாரிய நுகர்வோர் காலாண்டு கூட்டம் மின்சார வரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் வாரிய நுகர்வோர் காலாண்டு கூட்டம் மின்சார வரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நீலகிரி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பொது ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் கூடலூர் சதீஷ், உதகை -சிவகுமார், முன்னிலை வகித்தனர்.

 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஹால்துறை, புளுமாவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் போஜன் ஆகியோர் கலந்து கொண்டு மின்சார வாரியத்தின் பல்வேறு குறைபாடுகளை சுட்டி கட்டினார்கள்.

 

மின்சார வாரியத்தின் சார்பில் குறைபாடுகள் களைய விரைவான நடவடிக்கை எடுக்க வருவதாக உறுதியளித்தனர். மின் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பட்டதால் இடையிடையே மின்சார வினியோக குறைபாடுகள் ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் இந்த சூழல் உருவாகாது. வரும் 10ம் தேதி மின்தடை செயல்படுத்த படும் அதன்பின்னர் முழுமையாக சரியாகும் என்றனர்.

 

புதிய மின் கட்டண விகிதங்கள் வந்தவுடன் அனைத்து அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு வைக்கபடும். மின் கட்டணங்கள் இணைய வழியில் எளிதில் கட்டலாம், மேலும் மின்சார வாரிய சேவைக்கான கட்டணங்களும் இணையம் மூலம் விண்ணப்பித்து இணையம் மூலம் செலுத்தலாம். அதனால் எளிதாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கபடும் என்றனர்.

Share this…

CATEGORIES
TAGS