நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் ரத்து.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் இல்லாததால் கூட்டம் நடத்த வேண்டுமென நுகர்வோர் சங்க பிரநிதிகள் வலியுறுத்தல்.
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அனைத்து நுகர்வோர் அமைப்புகளுக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள கடிதம் அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு கலந்தாய்வுக் கூட்டம் நடத்த மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் அனைத்து துறை அலுவலர்கள் வந்திருந்தனர்.
ஆனால் கூட்டத்திற்கு வந்திருந்த மாவட்ட நுகர்வோர் சங்க பிரநிதிகள் அரசாணை எண்.389, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நாள் 28.12.1988 படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தான் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு 2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டுமென ஒருமித்த கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்திய நிலையில் மாவட்ட வழங்கல் அலுவலர் கூட்டத்தை வேரவொரு தேதியில் கூட்டம் நடத்தப்படும் தற்போது கூட்டம் ரத்து செய்கின்றது என அறிவித்து கூட்டதை ரத்து செய்தால் கூட்டத்திற்கு வந்திருந்த அனைத்து துறை அலுவலர்கள் திரும்ப சென்றனர்.