BREAKING NEWS

நெமிலி அருகே வாயில் கருப்பு துணையை கட்டி, திருவோடு ஏந்தியும், ஒப்பாரி வைத்து மத்திய மாநில அரசை கண்டித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நெமிலி அருகே வாயில் கருப்பு துணையை கட்டி, திருவோடு ஏந்தியும், ஒப்பாரி வைத்து மத்திய மாநில அரசை கண்டித்து விவசாய பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கல்பனாம்பட்டு கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக விளைவிக்கப்படும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நியமனம் செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் தனிநபர் இழப்பீடு பெற வழிவகை செய்ய வேண்டும், தென்னை-பனைமரங்களிலிருந்து கள் இறக்க அனுமதிக்கவும், எண்ணெய் வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும்,

பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீர்களை கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைககள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தியவாறு மத்திய மாநில அரசு கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது வாயில் அடித்துக் கொண்டும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Share this…

CATEGORIES
TAGS