BREAKING NEWS

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.

நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில், 87 மையங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு,

5687 மாணவ, மாணவிகளுக்கு, உணவு உண்பதற்கான தட்டு மற்றும் டம்ளர்களை ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் வாங்கி, அந்தந்த மையங்களுக்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு அவர்கள் வழங்கினார்.

உடன் நெமிலி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் தீனதயாளன்,வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS