BREAKING NEWS

நெல்லை அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி

நெல்லை அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி

 செய்தியாளர் மணிகண்டன்.

 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளைஞர்கள் தீவிர பயிற்சி செய்து வருகின்றனர்.

 

 

சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் குறிப்பாக பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக அந்த காலத்தில் ஒரு வழக்கமுண்டு.

 

நாகரிக காலத்தில் இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் தற்போது பரிசுகள் மட்டும் உண்டு.

 

 

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 60, 80, 114, 140 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.

 

முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும்.

 

 

தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம் வருவது குளத்தை வலம் வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.

 

 

இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில் இளவட்டக்கல் தூக்கு விளையாட்டு நடந்து வருகிறது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் இளவட்டக்கல் விளையாட்டு போட்டிக்காக தற்போது இளைஞர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

பொங்கல் திருவிழாவன்று பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டாலும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி காண ஏராளமான பொதுமக்கள் கூடுவது சிறப்பாகவும் . இதுகுறித்து பேட்டி உள்ளது.

 

CATEGORIES
TAGS