நெல்லை தேவர் சிலை அவமதிப்பு.

நெல்லை பேட்டையை அடுத்துள்ள திருப்பணிகரிசல்குளம் ஊரின் நுழைவு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் போட்டோ மற்றும்..
சிறிய சிலையினை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சிலை அருகே ஒன்று கூடினர் இதனால் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை சேதப்படுத்தியோர் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடையே கூறினர்.
இதனால் அப்பகுதி மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர் இதனால் பதற்றமான சூழ்நிலை தவிர்க்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பணிகரிசல்குளம்தேவர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்நெல்லை பேட்டைமுக்கிய செய்திகள்
