BREAKING NEWS

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

நெல்லை மாவட்டம் பணகுடியில்  புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
செய்தியாளர் மணிகண்டன். 
நெல்லை மாவட்டம் பணகுடியில் நீண்ட ஆண்டுகளாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சேதமடைந்த நிலையில் இருந்து வந்தது. இதனால் 3 ஆயிரத்து 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட  வாடகை கட்டிடத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது.
இதன் தொடர்பாக அரசுக்கு இழப்பீடு ஏற்படுவதை கணக்கிட்டு புதிய அலுவலகம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தற்போது 21லட்ச ரூபாய் மதிப்பில் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனினும் புதிய அலுவலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை முடங்கியுள்ளது.
தொடர்ச்சியாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவது அமலில் இருக்கிறது. எனவே புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அலுவலகத்தை திறக்க பொதுமக்கள்  கோரிக்கை விடுத்தனர். அதன் எதிரொலியாக இன்று சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு,   சார்ஆட்சியர் முகமது சபீர் ஆலம் ஆகியோர்கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில்  ராதாபுரம் வட்டாட்சியர் வள்ளிநாயகம், மண்டல துணை வட்டாட்சியர்  வில்லுடையார் வருவாய் ஆய்வாளர்அழகுமுத்துரேகா,பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி துணைத் தலைவர் சகாய புஷ்பராஜ், கிராமநிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், இசக்கியப்பன், விஜய், ராஜ்பிரதாப், பெருமாள், ராஜலெட்சுமி. உட்பட அரசு அதிகாரிகள் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS