நெல்லை முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா முக்கூடல் பேரூராட்சி மண்டபத்தில் வைத்து பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி சேரன்மகாதேவி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் வருவாய் ஆய்வாளர் , கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் முன்னிலையில் பேரிடர் மேலாண்மை குறித்து ராமசந்திரன் அவர்களும்,
பாம்புகள் குறித்து ரெட் கிராஸ் அலெக்ஸ் செல்வன் அவர்களும், தீ விபத்துகள் பற்றி தீயணைப்புத்துறை வரதராஜ் அவர்களும் வகுப்புகள் நடத்தினார்கள்.
இதில் நெல்லை நீர்வளம் மற்றும் ஆப்தமித்ரா பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்களும் , மாணவர்கள் மற்றும் ஊர் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி