BREAKING NEWS

நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.

நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.

 

மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதி வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்.

 

 

தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

 

 

இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் கலந்துகொண்டார்.

 

அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது தற்போது பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்ட அறுவடைக்க தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீர் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

 எனவே பாதிப்பு மற்றும் பயிர் பாதிப்புக்கு குறித்து உடன் கணக்கெடுப்பு நடத்திய ஏக்கருக்கு ரூபாய். 35 ஆயிரம் இழப்பீட்டை வழங்கிட மாநிலஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தற்போது குறுவை அறுவடை பணியில் நடைபெற்ற வரும் நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பதம் 22 சதவீதம் வரை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

 

 

மத்திய அரசு உணவு தானிய கொள்முதலில் தனியாரை கொண்டுவர விரும்புவதாக கூறியுள்ள நிலையில், மாநில அரசு இத்திட்டத்தை நிராகரிக்க வேண்டும்.

 

 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு நான்கு வழி சாலை அமைப்பதற்காக விளைநிலங்கள் பறிக்கப்பட்டுள்ளது.

 

இதனை எதிர்த்து போராடிய விவசாயி ஜெயராமன் மீது எவ்வித வழக்குகளும் இல்லாத போது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

இதற்கு காரணமான தென்காசி கலெக்டர், எஸ்.பி., மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )