BREAKING NEWS

நேரடியாக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.

நேரடியாக களத்தில் இறங்கிய கவுன்சிலர்.

நெல்லை மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட மாஞ்சோலை அருகே ஊத்து எஸ்டேட் செல்லும் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் மிகவும் ஆபத்தான முறையில் இருப்பதனால், 15 நிமிடத்தில் செல்லும் பேருந்து 40 நிமிடங்களுக்கு மேலாக செல்கின்றன.

 

 

மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 11 – வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் சாலையை சீரமைக்கக்கோரி முதல்வர், மாவட்ட ஆட்சியர், வனத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினருக்கு மனு அளித்த நிலையில், விரைவில் சாலை அமைய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இருப்பினும் இந்த சாலையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் அவதியை கருத்தில் கொண்டு ஊத்து எஸ்டேட்டை சேர்ந்த 11வது வார்டு திமுக கவுன்சிலர் ஸ்டாலின் தலைமையில் ஊத்து எஸ்டேட்டில் ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் 3 கி.மீ. தூரத்திற்கு தற்காலிகமாக சாலைகள் போடப்பட்டுள்ளது, மீதம் 2கிமீ வருகின்ற வாரம் சாலைகள் போடுவதாக அவர்கள் மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.

 

கவுன்சிலர் நேரடியாக களத்தில் இறங்கிய செயல்பட்ட இந்த செயலை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

CATEGORIES
TAGS