பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம்.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூந்தமல்லி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 500 பெண்கள் பால்குடம் ஊர்வலம்.
பூந்தமல்லி, மார்ச் 24: பூந்தமல்லி, சீரடி சாய் நகர் பகுதியில் அருள்மிகு வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா இந்தக் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.
பூந்தமல்லி டிரங்க் சாலையில் உள்ள பனையாத்தம்மன் கோயிலிலிருந்து தொடங்கிய பால்குடம் ஊர்வலம் சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலை வந்தடைந்தது. பின்னர் பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பாலை வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விஷேச பூஜைகள் நடைபெற்றன. பூந்தமல்லி, மாங்காடு, மலையம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.