BREAKING NEWS

பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார், 13 ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க திட்டம் தென்மண்டல ஐஜி பேட்டி.

பசும்பொன் தேவர் குருபூஜை விழாவிற்கு பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார், 13 ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க திட்டம் தென்மண்டல ஐஜி பேட்டி.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை வருகின்ற அக். 30ஆம் தேதி நடைபெற உள்ளது

 

 

இதனை அடுத்து தேவர் நினைவிடத்திற்கு தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மரியாதை செலுத்த வர உள்ளனர்.

 

 

இதனை அடுத்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க் தலைமையில் 5 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் கலந்து கொண்டு கமுதி தனி ஆயுதப்படை அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

அதன் பின்னர் செய்தியாளரை சந்தித்த தென்மண்டல ஐஜி, தேவர் குருபூஜைக்கு பாதுகாப்பு பணியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்தாயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 13 ட்ரோன் கேமரா மூலம் தேவர் குருபூஜைக்கு வரக்கூடியவர்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு வரக்கூடிய பொதுமக்கள் அரசு விதிமுறைகளை பின்பற்றி வர வேண்டும்.

 

 

வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது, வாடகை வாகனங்களில் வர அனுமதி இல்லை என்றார். அனுமதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )