பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக கடம்பூர் ராஜூ போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தினசரி சந்தை வியாபாரிகள் நடத்தி வரும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வியாபார சங்கங்கள் வியாபார பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் போராட்டத்தில் கலந்துகொண்டு வியாபாரிகள் மத்தியில் பேசினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில் :
கோவில்பட்டி நகராட்சி நிர்வாகத்தால் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும் அதற்கு எதிராக அறவழியில் போராடிய ஆறு வணிகர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தினசரி சந்தை விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பிரச்சனை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும்.
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய மார்க்கெட்டை அமைத்து கூடுதல் கடைகள் ஒதுக்கீடு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும்.
வியாபாரிகளின் பிரச்சினைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் உரிய கருத்து கேட்ட பின்பு இடமாற்றம் புதிய தினசரி சந்தை கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்துவதாகவும் வியாபாரிகள் மத்தியில் பேசினார்.